Tuesday 30th of April 2024 06:06:02 AM GMT

LANGUAGE - TAMIL
-
2020-இல் 184,370 நிரந்தர  குடியுருப்பாளர்களை வரவேற்றது கனடா!

2020-இல் 184,370 நிரந்தர குடியுருப்பாளர்களை வரவேற்றது கனடா!


கொரோனா வைரஸ் தொற்றுநோய் நெருக்கடிக்கு மத்தியிலும் கடந்த 2020-ஆம் ஆண்டு கனடா 184,370 நிரந்தர குடியுருப்பாளர்களை வரவேற்றுள்ளது.

கடந்த 1998-ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஒரு ஆண்டில் கனடாவுக்கு வந்த மிகக் குறைந்த புதிய குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை இதுவாகும்.

1998 ஆம் ஆண்டு கனடா 174,000 புலம்பெயர்ந்தோரை வரவேற்றது.

2020-ஆம் ஆண்டில் 341,000 புதிய புலம்பெயர்ந்தோரை வரவேற்க கனடா இலக்கு நிர்ணயித்திருந்தது. எனினும் கொரோனா தொற்று நோய் மற்றும் அதனால் விதிக்கப்பட்ட கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகள் காரணமாக இந்த இலக்கை அடைய முடியவில்லை.

இதேவேளை, பயணக் கட்டுப்பாடுகள் அமுல் படுத்தப்பட்டதால் நாட்டில் புதிய குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை மிக மோசமாகக் குறைந்துள்ளதாக கனடா குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை துறை (IRCC) தெரிவித்துள்ளது.

எனினும் கொரோனா தொற்று நோய்க்குப் பின்னரான பொருளாதார மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் அதிகளவு புலம்பெயர்ந்தவர்களை வரவேற்கும் தனது நிலைப்பாட்டில் கனடா உறுதியாக உள்ளது.

வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாத அளவு 2021, 2022, 2023-ஆம் ஆண்டுகளில் 12 இலட்சத்துக்கு அதிகமான புதிய குடியேற்றவாசிகளை வரவேற்க கனடா இலக்கு நிர்ணயித்துள்ளதாக கடந்த மார்ச் மாதம் கனடா , குடிவரவு அமைச்சர் மார்கோ மென்டிசினோ தெரிவித்தார்.

நடைமுறையில் உள்ள கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக நிர்ணயித்த இலங்கை அடைய முடியாவிட்டாலும் கூட குறைந்தது 2 இலட்சம் புதிய குடியேற்றவாசிகளை கனடா இவ்வாண்டு வரவேற்கும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.

தொற்று நோய் நெருக்கடிக்கு தீா்வு ஏற்பட்டால் ஆண்டு தோரும் 4 இலட்சத்துக்கு அதிகமான புதியவர்களை கனடா வரவேற்கும் எனவும் அவா் குறிப்பிட்டார்.


Category: உள்ளூர, புதிது
Tags: கனடா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE